ஆட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சசிகலா குறித்து ஒ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.


கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த போது, சசிகலா விடுதலைக்கு பிறகு யார் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது. ”சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்ட செயலாளர் என்றும் இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கருத்து தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா குறித்து பேசியது ஒ.எஸ்.மணியன் அவர்களின் சொந்த கருத்ததாக இருக்கலாம். ஆனால் சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை. அதிமுக-வின் நிலைப்பாட்டில் எப்பபோதும் மாற்றமில்லை“ என்றுள்ளார்.