தேசப்பாதுகாப்பை கருத்தில்கொண்டு சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்
தேசப்பாதுகாப்பை கருத்தில்கொண்டு சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டி ஆர். பாலு பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில்,
லடாக் எல்லையில் அண்மையில் சீனப் படைகளின் ஆத்துமீறிய மோதலை தொடர்ந்து இந்தியா வடமேற்கில் பஞ்சாபில் இருந்து வடகிழக்கில் அருணாசல பிரதேசம் வரை உள்ள நீண்ட நெடிய எல்லை மட்டுமல்லாமல் இந்தியாவின் தென்பகுதி எல்லையான தமிழக கடலோர எல்லை பகுதிகளிலும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான சேது சமுத்திர கடல் பகுதியில் தேச பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும். காரணம், சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வருவது இந்திய பாதுகாப்பு நலனுக்கு என்றைக்குமே உகந்ததல்ல. அல்ல என்றும்அவர் கூறியுள்ளார்,
மத்திய அரசு ஏற்கெனவே அந்தமான் தீவில் உள்ள நமது முப்படைகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னுரிமை முனைப்புடன் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.என்றும் அதைப்போலவே, தென் தமிழகக் கடல் பகுதி, குறிப்பாக சேது சமுத்திர கடல் பகுதி, புவியியல் ரீதியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் காரணமாகவும் நமது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது இன்றியமையாதது. அவர் தெரிவித்துள்ளார்,
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது தடைபட்டு முடங்கிக் கிடக்கும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது தெளிவாகும். இன்னும் சொல்லப் போனால் தேசப் பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கெனவே வழங்கியது.
2005 ம் ஆண்டும் பணிகள் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் தேச நலனுக்கும் செழிப்புக்கும் எதிரான சில சக்திகள் திட்டமிட்டு சதி செய்து மதரீதியான யதார்த்தத்துக்கு ஒவ்வாத வாதங்களை முன்வைத்து நீதி பரிபாலனத்தை திசைதிருப்பி, 12 ஆண்டுகளாக இந்த திட்டம் முடங்கிப் போகச் செய்துவிட்டனர்.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட வடிவமைப்பின் படி இந்திய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் 65 சதவீதம் கப்பல்கள் திட்ட வசதிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திர கனவுத் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாகவே நிறைவேற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை மோடி பெற வேண்டுமென திமுகவின் சார்பின் வேண்டுகோள் விடுக்க படுவதாக அவர் கூறியுள்ளார்,