தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணி! வழங்க வேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணி! வழங்க வேண்டும் யென தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அசாமிய மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அசாம் அமைச்சரவை அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு அசாம் ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 10ஆம் வகுப்பு வரை அசாமிய மொழியை கற்கும் மாணவர்களுக்கே அரசுப் பணிகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.


 


தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் இதுகூட செய்யப்படுவதில்லை. எனவே, உடனடியாகத் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும். அவ்வாறு தமிழ்ப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசுப் பணிகள் அளிக்கப்படும் எனும் சட்டத்தைத் தமிழக அரசும் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்து வதாக தெரிவித்துள்ளார்,


மேலும்  பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் வரை தமிழ்வழிக் கல்வியை குறிக்கோளாகக் கொண்டு நமது பாடமதை மாற்றப்படவேண்டும். என்றும் பின்னர் அது பட்டப் படிப்புகளுக்கும் விரிவாக்கப்படவேண்டுமென அந்த அறிக்கையில்  அவர் தெரிவித்துள்ளார்