தமிழக முதல்வர் டீவிட்டர் மூலம் பாராட்டு
சமூக இடைவெளியை கண்டறியும் நவீன கருவியை பொருத்திய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டீவிட் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் பொது இடங்களில் கூடும் மக்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கு “ IRIS ” என்ற புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடையே சமூக இடைவெளி இல்லை என்றால் இந்த கருவி ஒலி எழுப்பும்.
இந்த கருவி திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் முயற்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் செயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்ளுடன் முதலமைச்சர் ட்விட் செய்துள்ளார்
இதனிடையே காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் அவர்களின் முயற்சிக்கு சமுக வலைதளத்தில் பாரட்டு குவிக்கிறது,