சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.
ஜுன் மாதத்தில் அதிகரித்து வந்த சென்னையின் கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மண்டலங்கள் முழுவதும், மொத்தம் 73,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 52,000 பேர் குணமடைந்துள்ளனர். 20200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1169 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் மொத்தம் 9300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகரிலும் 8,200 பேருக்கு தொற்று பரவியுள்ளது.
தேனாம்பேட்டையில் 8100 பேரும், தண்டையார்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 8000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.