சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று 37,536 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 37,744க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 26 ரூபாய் உயர்ந்து 4,718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.10 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.55.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
இந்த வாரத்தில் மட்டும் ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 768 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் முதலீட்டுக்கு தங்கத்தை தவிர மாற்றுப் பொருள் வேறு இல்லை என நினைத்து முதலீட்டாளர்கள் அதன் மீதான முதலீட்டை அதிகரித்து இருப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.