ஆன்லைன் கல்வி தொடர்பாக தங்கம் தென்னரசு முன்வைத்துள்ள 12 கேள்விகள்..

பாடத்தில் சந்தேகங்களைத் தீர்க்க எத்தகைய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன தமிழக அரசுக்கு   தங்கம் தென்னரசு முன்வைத்துள்ள 12 கேள்விகள்..


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும் என, திமுக எம்எல்ஏவும், முன்னாள் கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும் என, திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான 12 கேள்விகளை எழுப்பியுள்ளார்.


 


தொலைக்காட்சிகள் வாயிலாகப் பாடம் நடத்தப்படும் எனில், எத்தனை தொலைக்காட்சிகளில் எந்தெந்த வேளைகளில் எவ்வளவு நேரம் பாடங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன?


எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன? தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பங்கு இதில் என்ன?எந்தெந்த வகுப்புகளுக்குத் தொலைக்காட்சி வாயிலாகப் பாடம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றது? பாட வேளைகளுக்கான பாட அட்டவணை தயார் செய்யப்பட்டுவிட்டதா?


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டு 30 சதவிகிதம் பாடங்களைக் குறைத்துள்ள சூழலில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முடிவென்ன


உள்ளிட்ட 12 கேள்விகளை முன் வைத்துள்ளார்