ரஜினி அரசியலுக்கு வரகூடாது -மூத்த ஊடகவியலாளர் v.சந்திர பாரதி (அரசியல் ஆய்வு கட்டுரை)
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ் பல அரசியல் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் தவிர்த்து ஊடகங்களால் மிக முக்கியமாக தொடரப் படுவது, தமிழ் நாட்டின் ஆளுமைமிக்க அடுத்த தலைவர் திரைத் துறையி லிருந்து வருவாரா? வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவாராஎன்பதுதான். பலநேரலைகள்விவாதங்கள், பேட்டிகள்தலைப்புச் செய்திகள்ஹயலலிதா மறைந்த பிறகு தமிழ் நாடு பல அரசியல் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் தவிர்த்து ஊடகங்களால் மிக முக்கியமாக தொடரப் படரப் படுவது, தமிழ் நாட்டின் ஆளுமைமிக்க அடுத்த தலைவர் திரைத் துறையி லிருந்து வருவாரா? வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவாரா? என்பதுதான். பலநேரலைகள், விவாதங்கள், பேட்டிகள், தலைப்புச் செய்திகள், கட்டுரைகள் என தினம் தினம் பரபரப்புகள். இதனிடையே திமுகவின் தலைவர் கலை தரும் மறைந்தார். தலைமை வெற்றிடம் விவாதங்கள் மீண்டும் களை கட்டுகின்றன.
சுதந்திர இந்தியாவில் காங் கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தால் 1967 ஆம் ஆண்டு டு தமிழ் நாட்டில் தோற்கடிக்கப் கப் பட்டது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் ஆளுமைப் பற்றாக் குறையும் மக்கள் எதிர்த்த இந்தியை திணிக்க முற் பட்டது போன்றவைகளே காரணிகளாக அமைந்தன. திராவிட முன்னேற்றக்கழகத் தின் மொழிப் பாதுகாப்பு, சமூக நீதி, கவர்ச்சியானதலை வர்கள் எனப் பலக் காரணி கள் திமுகவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனக் கோஷங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பிருந்தது. 1967 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு சந்தித்த பஞ் சமும், பஞ்சகாலத்தில் பொது விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் மக்கள் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்த விலைவாசி உயர்வும் பெரும்பாலான மக்கள் காங்கிரசுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்க வைத்தன. பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
1967 க்கு பிறகு தேசிய இயக்கமான காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளத் தவறியது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதல்வரான கருணா நிதி மத்திய அரசோடு இணக்க மானப் போக்கையே கை யாண்டார். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அதிமுக என்ற இயக்கம் கண்டார். இதன்பின்னணியில்காங்கிரஸ் இருந்ததாக சந்தேகங்கள், யூகங்கள் எழுப்பப்பட்டன. எம். ஜி. ஆர். அதிமுக விற்கென தனிக் கொள்கை கள் எதனையும் கட்டமைத் ததைப் போல் தெரிய வில்லை. திமுகவின் கொள்கை களைத் தொடர்ந்து வந்த தோடு கருணாநிதி ஒரு "தீய சக்தி" அவரை வீழ்த்துவதே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது வாழ்நாள் காலம் முடியும் வரையில் அவரே முதல்வராக வும் தொடர்ந்தார். இந்த வும் தொடர்ந்தார். இந்த காலக் கட்டத்தில் காங்கிரஸ் மாநிலத்தில் வலுவான தலைவர்களை உருவாக் காமலும் இரண்டு திரா விடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடனும் கூட்டணி அமைத்து தேர்தலைச்சந்தித்து வந்தது. எம்.ஜி.ஆரின் மறை விற்குப் பின்பு, திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்தனர். திராவிடக் கட்சி களோடு கூட்டு சேர்ந்ததில் இப்போதைய மத்திய அரசை ஆளும் பாஜகவும விதி விலக்கல்ல. தேசியக்கட்சிகள் கட்டெறும்பாய் தேய்ந்து போய் சொந்தக் காலில் நிற்கும் சக்தியற்றுப் போயின. கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலைதான் தொடர்கிறது. ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக மாநில முதல்வராக இருந்த கால க ட் ட ங் களில் அவரை எதிர்க்கும் துணிவு பிரதான எதிர்க் கட்சியான திமுகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் தாண்டி எவருக்கும் ஏற்பட்ட தில்லை. திரைத்துறையில் அரசியல் ஆசை வைத்திருந் தவர்களுக்கும் இது பொருந்தும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், கலைஞர் கருணாநிதி உடல் நலிவுற்று செயல்பாட்டில் இல்லாத கால கட்டத்தில் பலரும் துணிவுடன் அரசியல்கருத்துக் களைத் தெரிவித்து வருகின்றனர். திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது ஊடகங்களின் பார்வையை ஈர்க்கிறது பெரும் செய்தியாக மாறிப் போகின்றது.
இந்த வரிசையில் தான் கமல் ஹாசனின் டிவிட்டர் அரசியலும் தொடர்ந்து அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு, விஷாலின் தேர்தல் கள ஈடுபாடும், ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து அரசியல் நிலைப்பாட்டைடிசம்பர் 31, 2017அறிவித்தார். போர்வரும் போது களத்தில் இருப்பேன் என்றார். கட்சியின் பெயரை அறிவிக்காவிட்டாலும் மன்றம் ஒன்றை நிறுவி உறுப்பினர் சேர்க்கையையும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் வேலையையும் தனது திரைப்பட படப்பிடிப்பின் இடைவெளிகளில் செய்து வருகிறார். சமீபத்தில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்ததும் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் மூன்றம்சகொள்கை யினையும் அறிவித்தார். எழுச்சி ஏற்படும் தருணத்தில் தனது வருகையிருக்கும் என்றும் கூறினார். நமது ஊடகங்களும் அரசியல் களத்திற்கு முழுமை யாக உள் நுழையாதவரின் கருத்துகளை அனைத்து பிரச்சனைகளிலும் எதிர் நோக்கி வருகின்றனர். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொல்லும் கருத்து களை வைத்து சர்ச்சைகளும் எதிர் வினை கருத்துகளும் கச்சம் கட்டுகின்றன.
தற்போது "அண்ணத்த" படத்தை முடித்துக் கொண்டி ருக்கிறார். அடுத்து ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க இரு இருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ரஜினியின் கட்சி, அரசியல் சூடு பிடிக்குமா என்பது போக போகக் கான் கெரிய 1967 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது திமுக பல தேர்தல் களங்களைக் கண்ட அனுபவம் வாய்ந்ததாக இருந்தது. அதற்கு முன்பே திராவிடக் கொள்கைகள் தமிழ் நாட்டில் வேறூன்றி இருந்தன. காமராஜர் எதிர்ப்பு என்ற புள்ளியில் மூதறிஞர் இராஜாஜி திமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி காங்கிரஸை வீழ்த்த பேருதவி புரிந்தார். அது போன்ற ஒரு நிலை இப்போது உள்ளதா என்பது கேள்வியே. திமுக, அதிமுகவைத் தொடர்ந்து தமிழகத்தில் உருவான கட்சிகள் அனைத்து மே திராவிடக்கொள்கைகளையே தொடர்ந்து கொண்டிருக் கின்றன. விதி விலக்காக நாம் தமிழர் போன்ற சில கட்சிகள் தமிழ் தேசியம் பேசி வருகின்றன. தேர்தல் அரசியலில் இவற்றிற்கு பெருமளவு வரவேற்பில்லை.
இப்போதைய சூழலைச் சற்றுப் பார்க்கலாம்: 1. திராவிடக் கட்சிகளின் இரு பெரும் ஆளுமைகள் களத்தில் இல்லை 2. ஆளும் கட்சியில் பிளவு, உட்கட்சிப் பிரச்சனை, அதிகாரப் போட்டி, அதனைத் தொடர்ந்து மத்திய பாஜகவுடனான நெருக்கம், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகும் மாநில அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் மீது வெறுப்பை ற்படுத்தியிருக்கிறது. 3. ஆட்சியின் மீது மக்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் குறைவாக உள்ளது. வலுவற்ற இரட்டைத் தலைமையிலான கட்சி என்றபிம்பம் எதிர்தரப்பில் க ட் ட மை க் க ப் பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை வலுவான தலைவராக காட்டிக் கொள்ள முயல்கிறார். பல மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். | 4 . எதிர்க் கட்சியான திமுக ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் மக்களை ஓரணியில் திரட்டுவதிலும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிய வில்லை . மக்களவை தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்தத்த இடைத் தேர்தல்களில் தக்கவைக்க இயலவில்லை. அதன் தலைமையின் மீதான தலைமைத் திறன் குறித்தக் கேள்விகளை எழுப்புகிறது. தேர்தலை சந்திக்க தேர்தல் ஆலோசக ராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தப்படுத்தியிருப்பது கேலிக்கு உள்ளாகி யிருக்கிறது. . தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாமக கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் தொடர்கிறது. . மிஸ்டு கால் கொடுத்து இலட்சக்கணக்கான உறுப் பினர்களை அங்கத்தினர் களாகச் சேர்த்துள்ள தாகத் தம் பட்டம் அடித்த பாஜகமக்களவை தேர்தலில் ஈட்டுத் தொகையைக் கூட பெரு மளவிற்கு வாக்குகளைப் பெறவில்லை .. 7. காங்கிரஸ் சுயமாக தேர்தலை சந்திக்கும் பலத் துடனோ எண்ணத் துடனோ இல்லை என்பது வெளிப் படை. திமுகவுடனேயேபயணிக்கும் என்றதோற்றத் தையே அளித்து வருகிறது. 8. திரைத்துறையிலிருந்து கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்கள் தேர்தலில் களம் கண்டது. குறுகிய காலத்தில் கட்டமைப்பும் பெரும் பண பலமும் இல்லத நிலையில் வெற்றி பெறவில்லை என்றாலும் நகர்புறங்களில் கணிசமாக ஆதரவு இருப்பதைக் காட்டினார். திரைப் பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றங்கள் துணையோடு அரசியல் களம்காணவிழைவதுதமிழ் நாட்டிற்கு புதியதல்ல.
இவர்களில் ரஜினி மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். சிறுவர் முதல் முதியவர் வரை அவரது ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். தலைமுறைகள் தாண்டிய வசூல் நாயகனாக திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இன்றும் தொடர்கிறார். ரசிகர்களின் ஆதரவு வாக்கு களாக மாறுமா, இல்லை அதுவெறும்காட்சிப்பிழை தானா? அவர் மீது பிற அரசியல் அமைப்புகள் வைக்கும் விமர்சனங்களும் அ வ் வ ண் ண ம இருக்கின்றன. 1996லேயே அரசியலுக்கு வந்து விட்டதாக ஊடகங்கள் கூறி வந்த நிலையில் ரஜினி 2017க்குப் பிறகே தீவிர அரசியல் சிந்தனை ஏற்பட்டதாகக் கூறுகிறார். 1996 இல் அதற்கு முன்பிருந்த ஜெயா தலைமையிலான ஆட்சியின் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் ஏற்பட்டிருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. மிக ஆடம்பரமாக ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்திருந்தது. க வைத்திருந்தது. பலமான கூட்டணியை திமுக பெற்றிருந்தது. இந்த சமயத்தில் ரஜினி திமுக- தமகவிற்கு ஆதரவு (ரஜினி வாய்ஸ்) அளித்திருந்தார். மக்களின் அதிருப்தி, திமுகவின் பிரச்சாரம், பலமானகூட்டணி இவற்றால் மான கூட்டணஇவற்றால் ஜெயாவின் தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனை"காக்காய் உட்கார பனம் பழம் விழுந்ததைப் போல , ரஜினி வாய்ஸால் கிடைத்த வெற்றி என்று சொல்லப்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்களின் "ரஜினி வாய்ஸ்” பலிக்க வில்லை என்பது உண்மையே.
ரஜினி ஒரு திரைக் என்றால் கலைஞர். அனைத்து குடி மக்களுக்கும் இருக்கும் ரஜினியின் நல்ல எண்ணம் போலவே 1அவருக்கும் நேர்மையான அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. எந்தக் கட்சியின் கொள்கை அவருக்கு ஏற்புடையதோ அதனை அவர் 2ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவருடைய உரிமை. அவரே கட்சி ஆரம்பித்து பாரை ( தேர்தல் அரசியல்) சந்திக்கிறார் என்றால் 3அவரது கொள்கை என்ன, செயல் திட்டங்கள் என்ன, அவருக்குத் துணையாக வருபவர்களின் பலம், பலவீனமென்ன என அறிந்து 4கொள்ள தமிழக மக்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறான எந்த கொள்கைகளையும் கோட்பாட்டையும் இதுவரை ரஜினி முன் மொழிந்தாரல்ல. 5இனியும் முன் மொழிவாரா என்பது கேள்விக்குறியே. மட்டும் அவர் அரசியலுக்குவர வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டி வந்துள்ளனர். அவர்களது ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் ரஜினியின் சில படங்களில் வசனங்கள் இடம் பெற்றன. இவ்வசனங்கள் வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டு தன்னால் நடிக்க மட்டும் தான் செய்யப்பட்டது என ரஜினியே கூறினாலும், தின் ரஜினியின் ரசிகர்கள் அதனை அவரது கருத்தாகவேக் சொன்னதில்லை கொண்டாடினர்.
ரஜினிக்கு சொன்னவைகளில் அரசியல் ஆர்வமுள்ளது என்ற இணைப்பைத் எண்ணத்தைக் கருத்தரித் தனர். ரசிகர்களின் ஆர்வம் சர் சிகர்களின் ஆர்வம் ரஜினியின் திரைப்பட வியாபாரத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியதேயன்றி வேறு நட்பும் பலனில்லை. வந்துள்ளார் தாண்டி ஆட்சியில் இருக்கும் அரசு ஊழல் மிக்கது பங்களிப்பு இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்பது எல்லா மக்கள் குடிமகனுக்கும் உள்ள கொள்கைகள் கருத்து தான். அதனையே பாட்டின் தான் ஒரு தலைவனாக முன் மொழிந்தால் மாற்று என்ன என்ற கேள்விக்கும் பதில் தமிழக சொல்ல வேண்டும். ரஜினி விதிவிலக்கல்லரசிகர்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாராக, இறையுணர்வு நிலைப்பாட்டைக் கொண்ட ஆன்மீக வாதியாக ஒரு இருக்கலாம். இதனை அவரது கொண்டால்ரசிகர்களும் ஏன் பொது மக்களும் கூட ரசிக்கலாம். விரும்பி தொடரலாம். பாட்டில் ஆனால், ஒரு ஜனநாயகவாதி யாக ஒரு மக்கள் தலைவனாக இருப்பதற்கு இந்தத் தகுதிகள் மட்டும் போதுமா ! தன்னை மக்கள் தலைவனாக அடையாளம் காட்டிக் கொள்ள இதுவரை ரஜினி ஏதாவது செய்திருக்கிறாரா ? என்றால் இல்லை.
இதுவரை பொதுப் பிரச்சனைகளில் ரஜினியின் பங்கு என்பது: 1. வெடிகுண்டு கலாச்சார மும் அகங்காரமிக்கவர் களின் ஆட்சியும் தொடர்ந் தால் தமிழ் நாட்டை ஆண் டவனாலும் காப்பாற்ற முடியாது என்றது 2. காவிரிப் பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத மிருந்தது (இதிலும் பல சர்ச்சைகள் உண்டு) 3. காவிரி நீரைதமிழகத்திற்கு தராவிட்டால் ரசிகர்படை யோடு கர்நாடகாவை முற்றுகையிடு வேன் எனக் கூறிப்பிறகுபின்வாங்கியது 4. வீரப்பனால்கன்னடநடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவரை மீட்க அரசோடு இணைந்து பணி யாற்றியது | 5. நதிகள் இணைப்பிற்கு ஆதர வாகக் குரல் கொடுத்தது, நிதியளிக்க முன் வந்தது போராட்டம் என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றது 7. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும், ஐதீகமும் காப்பாற்றப்பட வேண்டும் என இன்று சொன்னது ( இந்த முறை ஊடக செய்தியாளருக்கு தலை சுற்றியது) இதனைத்தாண்டிதமிழகத் இதனைத்தாண்டிதமிழகத் தின் நடப்பு அரசியலில் ரஜினி ஆரவம் காட்டி கருத்துச் சொன்னதில்லை . மேற் சொன்னவைகளில் நதிகள் இணைப்பைத் தவிர்த்து மற்ற வைகளில் தமிழ் திரையுலக மும் பங்கேற்றுள்ளது. தனது சூப்பர் ஸ்டார அந்தஸ்தோடு அரசியல் தலைவர்களிடம் நட்பும் நெருக்கமும்பாராட்டி வந்துள்ளார் என்பதைத் தாண்டி அவரது அரசியல் பங்களிப்பு என்று ஏதுமில்லை.
எந்த ஜனநாயகத்திலும் மக்கள் தங்கள் தலை வனை கொள்கைகள் செயல் பாட்டின் அடிப்படையில் கன் தான் அங்கீகரிக்கிறார்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழக மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ரஜினி தனது அரசியல் பிரவேசம் மற்றும் நிலைப்பாட்டைக் கூறுவதாக ஒரு வாதத்திற்கு எடுத்துக கொண்டால், அவர் முன் நாம் வைக்கும் கேள் வைக்கும் கேள்விகள் : உங்களது அரசியல் நிலைப் பாட்டில் )
முக்கியக் கொள்கைகள் என்ன ?
a) அரசியல் சித்தாந்தம்
b) பொருளாதாரக் கொள்கை
c)சமூக நீதி பற்றிய பார்வை
d)மொழிக் கொள்கை
e) வளர்ச்சி குறித்த கண்ணோட்டம் மக்கள் நலத் திட்டங்கள்
a) விலையில்லா பொருட்கள் (அ) இலவசங்கள் குறித்த பார்வை
b) கல்விக் கொள்கை மற்றும் செயல்பாடு சுகாதாரக் கொள்கை மற்றும் செயல்பாடு தொழில் கொள்கை மற்றும் வேலை வாய்ப்பு உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மக்களுக்குப் பயன்பாடு ஆட்சிமை
a) ஊழல் ஒழிப்புக் கொள்கை, செயல் படுத்த திட்டம் சேவை உரிமை பற்றிய கொள்கை மீதான பார்வை நிர்வாகத்தில்வெளிப் படைத் தன்மையை அமல்படுத்த திட்டம் சகலருக்கும் சம உரிமை அமல்படுத்த திட்டம் மத்திய மாநில அரசு களுடான உறவு குறித்த கண்ணோட் டம் இவற்றிற்கு இன்றைய அளவில் நமக்கு தெரிந்த அளவில் அவரிடம் பதில்கள் இல்லை. ரஜினி என்னும் தனி நபர்தான்சரி என்று நம்புகின்ற, செய்ய விளைகின்ற செயல் திட்டம் தாண்டி ஏதுமில்லை. திட்டம் தாண்டி ஏதுமில்லை . ரஜினியை தெய்வமாகத் தொழும் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்ளலாம், 7 72 கோடிதமிழ்மக்களும் அறிவிக் கப்படாத கொள்கைகளை செயல் திட்டங்களை ரஜினி என்ற தனி நபர் தொட்டு ஏற்க முடியாது.
ரஜினி என்னும் மக்கள் மனம்கவர்ந்ததிரைக்கலைஞர், இந்திய இறையாண்மையை மதித்து சட்டப்படி வாழும் குடிமகனை ரசிக்கலாம் வாழ்த்தலாமெயன்றி , கொள்கைகள், கோட் பாடுகள், செயல் திட்டங்கள் என்றேதுமின்றி அவரைதலை வனாக ஏற்பது எப்படிக் கூடும். ரஜினி அறிவித்துள்ள மூன்று கோட்பாடுகள் பதார்த்த அரசியலுக்கு ஒத்து வருமா என்ற விமர் சனமும்கச்சைகட்டிவருகிறது. வித்தியாசமான கட்சி யாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த் தத்தை புறக்கணிக்கும் கொள் கைகள் எவ்வாறு செல்லு படியாகும். தலைவனின்றி எழுச்சியை மக்கள் ஏற்படுத்த அழைப்பதும் அவ்வாறு உருவாகும் எழுச்சியை தலைவனாக சுவீகரிப்பதும் ஏற்புடையதா?. சாத்தியமா? சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சந்திர குப்த மௌரியர் கதையை சுவாரசியமாகக் கூறினார் ரஜினி. ரஜினிதான் சந்திர குப்தன் என்றால் சாணக்கியர்யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சாணக்கியர் ரஜினி என்றால் சந்திர குப்தன் யார் என்ற கேள்வியும் இயற்கையே. ரஜினி வேண்டிய எழுச்சி சுழலாக எங்கு இருக்கிறது, சுனாமியாக எப்போது மாறும் என்ற கேள்வியும் உள்ளது. எழுச்சி சுனாமிக்காக காத்திருக்கப் போகிறாரா ரஜினி, மக்களால் எழுச்சி தன்னால் ஏற்படுமா என்ற கேள்விகளும் உள்ளன.
ரஜினியையாரும் இயக்குவ தாகத் தெரியவில்லை. தமிழக அரசியல் களம் அளிக்கும் சந்தர்பத்தைப் பயன் படுத்தவே நினைக்கிறார். திரைப்படம் எடுக்க நல்ல கதைக் களமும், தேர்ந்த நடிகர்களும், திறமை யான தொழில் நுட்பக் கலைஞர் க களும், நிதி ஆதாரமும், சரியான திட்ட மிடலும், வியாபாரத் திறமையும் போதும். அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்த திறன், செல்வாக்கு, நிதி ஆதாரம், திட்டமிடல் தாண்டி சில குணாதிசயங்கள் தேவை. மிக முக்கியமாக நடைமுறையில் நடிப்பு, வாய்ச்சொல் வீரம், நெஞ்சம் கலங்கா துரோக உள்ளம் வேண்டும். ரஜினிக்கு இந்த கல்யாண குணங்கள் அமையவாய்ப்புகள் துர்லபம். ரஜினி என்பவர் அரிதிலும் அரிதான காளை, அவருக்கு கொம்பு சீவி காயப்படுத்த எவரும் முனைய வேண்டாம். ரஜினிக்கு அரசியல் ஏற்புடை யக் களமல்ல, ரஜினி அரசியலுக்குவரவேண்டாம்..https://youtu.be/cObGu-a_b1whttp://www.citycornerpaper.com/e-paper.php