ரஜினியின் மாற்று அரசியல்:
மாற்றம் ஒன்றே மாறாதது எனும் வாசகத்திற்கேற்ப, ரஜினியின் சமீபத்திய அறிவிப்பு அதை பறைசாற்றும் வகையிலே உள்ளது. அவரின் மாற்று அரசியல் குறித்த தெளிவான, தீர்க்கமான சிந்தனைகள் மற்றும் அறிவிப்பானது, மாற்றம் வேண்டும் என தவம் கிடக்கும் பல இலட்ச இளைஞர்களுக்கான வரமாக பார்க்கப்படும் வேளையில் அதை குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் விவாதங் களையும், நாம்காட்சி ஊடகத் திலும் சமூக வலைதளங் களிலும் காண முடிந்தது.
ஏன்? இதை எதிர்க்கிறார் கள், யார்? இதை எதிர்ப்ப வர்கள் என உற்று நோக்கினால், தென்படுவது,நம் மாநிலத்தின் பிரதான கட்சிகளின் தொண்டரடி யார்களேமற்றும் இரண்டாம்/ மூன்றாம்கட்டதலைவர்களே. அவர்களுக்கு ஏன் அத்துணை எதிர்ப்பு ரஜினியின் அறி விப்பு மீது எனில், மிகவும் எளிதான விடை: அவர்களின் அரசியல் அதிகார திட்டங் களை, இலக்குகளை, எங்கே இந்த அறிவிப்பு தவிடுப் பொடியாக்கி விடுமோ என்ற அச்சமே... ரஜினியின் மூன்றம்ச திட்டங்களில் பிரதான மானதான, இளைஞர்கள், 48 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அரசியல் அதிகாரத் தில் முன்னுரிமை என்ற திட்டம் நிச்சயம் பாராட்ட பட, வரவேற்க்கப்பட, முன் னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும்.
இங்கு அரசியல் என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக பார்க்கக் கூடிய வேளையில் இதுப் போன்ற புத்துணர் வூட்டும் புதிய சிந்தனை யோடு கூடிய திட்டமும், தலைமையும் இக்கணத் தேவை. அதை நன்குணர்ந்து ள்ள ரஜினி, அருமையான யோசனைகளோடு புதிய அரசியல் மாற்றத்திற்கு அ வித்திட்டுள்ளார். அவரை ஊக்குவித்து, திரளாக பங்குப் பெற்று, அந்த மாற்று அரசியலை முன்னெடுப்போமாயின், நிச்சயம் அடுத்த தலை முறையினருக்கு மிகச்சிறந்த சமூக கட்ட அமைப்பை, அரசியல் மாட்சி மற்றும் மாண்பை, வர்க்க பேத மற்ற சாமனியருக்கும் அதிகாரம் என்ற நிலையை உருவாக்கி தமிழ்நாட்டை பெருமைப்படுத்தலாம். தவிர்த்து , ரஜினியை விமரிசனம் செய்து, அவரின் மாற்று அரசியலக்கான விதையை, விதைக்கும் மன்னமே சீர்குலைத்து கருவறுப்போமாயின், இன்னும் பன்னெடுங் காலத்திற்கு இங்கே அரசியல் அதிகார பகிர்வு என்பது பண முதலைகளுக்குள்ளும் மற்றும் ஊழல் மலிந்த நபர்களிட மும் மட்டுமே ஏற்படும். சாமானியரகள் மிகச்சாதர ணர்களாக இப்பொழுது
(கட்டுரையாளர் : அரசியல விமர்சகர் சபரி)
இருப்பதை விட இன்னும் சில மடங்கு கீழிறக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஒரமாய்தள்ளப் படுவர் என்பது உறுதி. காந்தி அறவழிப் போரை ஏற்றப் போது எள்ளி நகை யாடியவர் ஏராளம் ; அத்தகை யர்க்கும் சேர்த்தே அ வர் போராடி னார் - மாற்றத்தை நோக்கி பயணப் பட்ட அநேகர்க்கும் இத்தகைய எதிர்ப்பு என்பது புதிதல்ல... மிகச் சமீபத்திய உதாரணம் - அன்னா அசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம். ஒற்றை மனிதாய் தன் போராட் டத்தை துவக்கியவர்க்கு நாடே பின் நின்றது சில நாட்களில். நின்றதோடு மட்டு மல்லாமல் அன்றைய ஆட்சி யாளர்களையே நிலை குலையச்செய்து, ஆட்சி மாற்றத்தையே கொணர்ந் தனர், நம் மக்கள். | ரஜினியின் இந்த அரசியல் மாற்றத்திற்கான அறிவிப்பும் அத்தகைய எழுச்சியை காணும். இனி ரஜினி செய்ய வேண்டியது, அவர் சொன் னதுப் போலவே, எழுச்சியை அலையாக மாற்ற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ, அவையனைத்தையும் கால தாமதமின்றி, தீர்க்கமாய் செயல்படுத்தி, அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்லுதலே ஆகும். அதை அவர் செவ்வன செய்வாரா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.