பள்ளி மாணவிகள் சாதனைபள்ளி மாணவர்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கிடும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு தந்தையாக கருதப்படும் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இந்தாண்டு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய நிறுவனம் இணைந்து பலூன் சாட்டிலைட்டை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா.
சென்னை சிறுச்சேரியில் ஸ்பேஸ் போர்ட் இந்தியா இடத்திலிருந்து கோயம்புத்தூர் ஜீவன் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள்கள் பலூன் சாட்டிலைட். இஸ்ரோ செயலாளர் உமா மகேஷ்வரன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்களின் விண்வெளியின் ஆர்வத்தினை தூண்டும் வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் விண்வெளி ஆய்வினை பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக ஸ்ரீமதிகேசன் தெரிவித்தார். விழாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கபட்டன.