அமெரிக்காவை கலக்கும் இராயப்பேட்டை பிரியா ரகுசந்தர்

அமெரிக்காவை கலக்கும் இராயப்பேட்டை பிரியா ரகுசந்தர்https://www.youtube.com/watch?v=ALlTABodk8M


    பிரியா ரகுசந்தர், பார்ப்பதற்கு எளிமையாக இனிமையாக தெரிந் தாலும் உள்ளுக்குள் ஜான்சி ராணியைப் போல வீரக்கனல் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். தற்போது சான் ஆண்டனியாவில் 3 ஆண்டுகள் வசித்து வருகிறார்.சான் ஆண்டனியாவில் தமிழர்கள் மத்தியில் இவரது மேடை நாடகங்கள் பிரபலம்.  காவிரி நதி நீர் பிரச்சினை, விளக்கும் பாரத தேச நாடகம், பாபரி மசூதி தொடரபான மேடை நாடகம், அரசியல் நையாண்டி நாடகங்க\ளை இயக்கி நடித்து உள்ளார்.


        சென்னையில் பிரபல நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணிபுரிந்த பிரியா சென்னை ராயப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயது முதற்கொண்டு சமூக நல சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டே இவர் பணியை மேற் கொண்டிருந்தார். மாநிலக்கல்லூரி பேரவை தலைவியாக அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றவர். களில் மாணவியருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.


        திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் சான் ஆண்டனியா சென்று இல்லத்தரசியாக சிறப்புற திகழ்கிறார். இருப்பினும் தமிழ் மீதும் தமிழ் கலைகள் மீது முள்ள பற்றால் அங்குள்ளவர்களுக்கு தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்றுத் தருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். தனது எல்லா வெற்றிகளுக்கும் கணவர் ரகுசந்தர் உறுதுணையாக இருப்பதாக கூறும் பிரியா றாலும் நம் தொன்மைச்சிறப்புமிக்க கலைகளை அயல் நாடுகளிலும் வளர்த்து வருகிறார் .