அதிமுக திமுக பொது எதிரியை வீழ்த்த வேண்டுமென்றால் ரஜினி கூட்டணி வைத்தாக வேண்டும்-அரசியல் விமர்சகர் சபரி


கால தாமத அறிவிப்பு ரஜினிக்கு  சிக்கலை ஏற்படுத்தும் -https://www.youtube.com/watch?v=ua5jXHuLjcY&t=307sஅரசியல் விமர்சகர் சபரி


 


கட்சி பெயரை அறிவிப்பார்  என்ற எதிர்பார்ப்பை ரஜினி நிறைவேற்றி யிருக்க வேண்டும் என்றும், இனியும் காலதாமதம் செய்வதும் அவரின் அரசியல் பயணத்திற்கு பெரும் சுமையாக மாறி விடுமென அரசியல் விமர்சகர் சபரி தெரிவித்துள்ளார்.


 



 


சிட்டி கார்னர் இதழுக்கு ரஜினி அரசியல் நகர்வு குறித்து பல்வேறு விஷயங்களை பட்டியிட்டார்.


ரஜினி கால தாமதம் அவருக்கு சிக்கலை உருவாக்கும். தற்போது உள்ள சூழலில் மக்களை சந்தித்து பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை சந்திக்கும் பயணங்களை அவ்வ்ப்போது மேற்கொள்வதை சுட்டி காட்டி சபரி, அதே போன்று விரைவில் மக்களை சந்திப்பது அவசியம் என்றார்.


குறைந்த காலத்தில் கட்சி தொடங்கி, மிகப்பெரிய தாக்கத்தை பலர் ஏற்படுத்திய வரலாறு கடந்த காலத்தில் உண்டு  என்றாலு தற்போது உள்ள சூழல் அது போல் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினி எதிர்பார்த்த விஷயங்கள் கூட்டத்தில் கிட்டவில்லை என்பதே யதார்த்த உண்மை என்றும் சபரி தெரிவித்துள்ளார்.


ரஜினி பிற கட்சிகளுடன்  கூட்டணி குறித்து யாரும் விமர்சிக்க முடியாது என்றும் கடந்த காலங்களில் நேர் எதிரான கூட்டணிகளை தமிழகம் சந்தித்து இருக்கிறது என்றார்.